24 மணி நேரத்தில் 50 லட்சத்தை தாண்டிய ’கபாலி’ டீஸர்

24 மணி நேரத்தில் 50 லட்சத்தை தாண்டிய ’கபாலி’ டீஸர்

1462171368-86981462171368-8698
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, நாசர், வின்ஸ்டன் சோ, ரோஷன், தன்ஷிகா, கலையரசன், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கபாலி’. இந்த படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்துள்ளார். கபிலன், கானா பாலா, உமாதேவி, அருண் ராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீஸர் நேற்று காலை 11 மணிக்கு வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்குள் கபாலி திரைப்படத்தின் டீஸரை 51 லட்சத்து 11 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

Related Articles

0 comments:

Post a Comment

Powered by Blogger.

SPC Interiors Cuddalore 9663000555

Search This Blog

Pages