விஜய் வழியை பின்பற்றிய விஷ்ணு விஷால்


விஜய் வழியை பின்பற்றிய விஷ்ணு விஷால்

விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார். எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
201605051825061577_Vishnu-Vishal-Followed-Vijay-way-style_SECVPF
இப்படத்தின் டிரைலரை இசையமைப்பாளர் அனிருத், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரின் இறுதியில் ரோபோ சங்கர் ‘அம்மா இங்கே வா…வா…’ என்ற ரைம்ஸை பாடுகிறார். ஏன் ரைம்ஸ் பாடுகிறீர்கள் என்று சூரி கேட்க, அதற்கு அவர் இப்போ எல்லாம் ரைம்ஸ் பாடினால் தான் டிரைலர் ரீச்சாகும் என்று கூறுகிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் டிரைலரிலும் விஜய் ரைம்ஸ் பாடுவார். இது நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாணியை விஷ்ணுவும் பின் தொடர்ந்திருக்கிறார். மேலும் இந்த டிரைலரின் இறுதியில் விஜய் பேசும் வசனமான ‘ஐ அம் வெய்டிங்’ என்று விஷ்ணு கூறியிருக்கிறார்.
தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாளை இப்படத்தின் பாடல்களை வெளியிட இருக்கின்றனர்.

Related Articles

0 comments:

Post a Comment

Powered by Blogger.

SPC Interiors Cuddalore 9663000555

Search This Blog

Pages